Ta:NeMo-Linux

From MozillaWiki
Jump to: navigation, search

நீமோ கட்டுரை தளம்
லினக்ஸ் என்றால் என்ன?
கட்டுரை தளம் செல்ல | முகப்பு
ஆசிரியர்
துவாரக் (Dwarak)
மொழிபெயர்ப்பாளர்
கௌதம்ராஜ் (Gauthamraj Elango)


லினக்ஸ் என்றால் என்ன?

லினக்ஸ் என்ற வார்த்தையை நீங்கள் தற்போதைய காலத்தில் கேட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் இந்த வார்த்தையை முன்பு கேட்டதில்லையா ? கவலை வேண்டாம் ! இப்போது லினக்ஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள். லினக்ஸ் என்பது ஒருவகையான கணினி இயக்கு தளம் அல்லது ஒபெரடிங் சிஸ்டம் ஆகும் (Operating System ). சரி...! இயக்கு தளம் என்றால் என்ன ?


கணினி என்பது இடைத்தொடர்புடைய கூறுகளின் தொகுப்பு அல்லது கூட்டமைப்பு , இதனையே கணினி வன்பொருள் (Hardware) என்று நாம் அழைக்கிறோம். இதனை செயல்படுத்தவும் , கட்டுப்படுத்தவும் நம்மோடு தொடர்புக் கொள்ள வைக்கவும் ஒன்று வேண்டும் அல்லவா ? இதற்காகப் பயன்படுத்தப்படுவதுமான கணினியில் பதிவுச் செய்யப்படுவதுமான கணினியின் மென்பொருளே ஒபெரடிங் சிஸ்டம் அல்லது இயக்குதளம் என்று ஆழைக்கப்படுகிறது.


இன்று காணும் பல கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயக்குதளம் பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். மேலும் ஒரு சிலவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஒஸ் (MAC OS) இயக்கு தளம் பயன்படுத்தப் படுவதை கண்டு இருக்கலாம். இவை அனைத்தும் அற்புதமானவையே , அதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் , இவை லினக்ஸ் வழங்குகின்ற சில அம்சங்களில் பின்தங்கியே உள்ளன.


நாம் ஒரு சிறுகதையை பார்ப்போமா?


கணினியின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்க , விரும்பிய முடிவுகள் வருவதற்க்கான புதிய சிக்கலான செயல்பாடுகளும் , வன்பொருள் கையளுடலும் செய்ய வேண்டியக் கட்டாயம் உண்டானது. ஆனால் , இதனை செய்வது மிகவும் கடினமாக மாறியது. எனவே , மக்கள் தங்களின் எளிய குறியீடுகளை கையாளஒரு இயக்கு தளம் வேண்டும் என்று எண்ணினார்கள்.


அதன் காரணமாக , 1969 ஆம் ஆண்டு , முதல் இயக்கு தளமான உனிக்ஸ் - உநிப்லெக்ஸ் தகவல் கம்பியுடிங் சேவை (UNIX) பிறந்தது , பின்பு இதற்க்கான நிதியை பெல் ஆய்வகத்தின் AT & T வழங்கியது.


பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் , 1982 ஆம் ஆண்டு AT & T உனிக்ஸ் இயக்கு தளத்தின் உரிமத்தைப் பெற்று , அதன் முதல் வணிகப் பதிப்பை பல்கலைக்கழகங்கள் , வங்கிகள் , ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மூல குறியீடுகளுடன் வெளியிட்டது. இச்செயல் , கணினி ஆர்வலர்களை சலிப்படைய வைத்தது , ஏனெனில் பொதுமனிதர்களால் குறியீடுகளுக்கு பங்களிக்கவோ , மாற்றம் செய்யவோ முடியவில்லை. அப்படிப்பட்ட கணினி ஆர்வலர்களில் , ஒருவர் தான் ரிச்சர்ட் ச்டல்ல்மான் (Richard Stallman) , MIT - ன் நுண்ணறிவு ஆய்வக உறுப்பினர்.


அவர் உங்களுக்கு அறிமுகமானவர் தானே ? இல்லையா ? நாம் அவரைப்பற்றி முந்தைய வெளியிடுகளில் பேசி இருக்கிறோம். நினைவுக்கு வந்துவிட்டதா ? ஆம்.. அவர் தான் GNU திட்டத்தின் நிறுவனர் , GNU திட்டதின் குறிக்கோள் உனிக்ஸ் இயக்கு தளத்தைக் காட்டிலும் சிறந்த இயக்கு தளத்தை உருவாக்கி அதனை இலவசமாக வெளியிடுவதேயாகும். அவரே , இலவச மென்பொருள் அறக்கட்டளையைத் தொடங்கினர்.அவரின் இயக்கு தள திட்டமானது சரியாக வராத காரணத்தால் , திட்டம் நிறுத்தப்பட்டது.


சில ஆண்டுகளுக்குப் பின்னர் , 1991 ஆம் ஆண்டு மாணவரான லினஸ் டோர்வல்ட்ஸ் (Linus Torvalds ) ச்டல்ல்மான் போலவே இருவரும் தனக்கென ஒரு இயக்கு தளம் உருவாக்கும் பணியைத் தொடங்கினர். அவர் வணிகப் பதிப்பு இயக்கு தளங்களில் இருந்து விடுபட ஒரு இயக்கு தளத்தை உருவாக்கினர்.


அவர் இச்செய்தியை வெளியிட , ஒத்தக்கருத்துடைய மக்கள் உலகத்தின் பல்வேறு இருந்து , அவருடைய திட்டமான முதல் இலவச இயக்கு தளத்தை உருவாக்குவதில் பங்கேற்றனர் - ( LINUX )


போதுமான கதைகளைக் கூறிவிட்டேன் அல்லவா ?


சரி...! இனி நாம் லினக்ஸ்-ன் தேவையைப் பார்ப்போமா ? விண்டோஸ் இயக்கு தளம் மிகச் சிறந்தது தான் . ஆப்பிள் மாக் ஒஸ் பற்றிக் கூறவே தேவையில்லை.


ஆனால் , லினக்ஸ் இயக்கு தளத்தில் கணினியை வைரஸ் தாக்கிவிட்டது என்ற பேச்சிற்கே இடமில்லை. வைரஸ் என்பது கணினியின் சாதாரண செயல்பாடுகளைப் பாதிக்கும் ஒரு வகையான மென்பொருளாகும். லினக்ஸ் இயகுத் தளத்தை , எந்த வைரஸ்களும் தாக்க முடியாது.


லினக்ஸ் இயக்கு தளத்தின் மற்றொரு சிறப்பு , இது முற்றிலும் இலவசம் , மேலும் உங்களின் விருப்பம் போல இதனை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.


விண்டோஸ் , மாக் ஒஸ் இயக்கு தளங்களில் நான் மிகவும் வெறுப்பது அவர்களின் வாடிக்கையாளர் சேவை. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அதற்கான பதில்கள் வர காலதாமதம் ஆகும். ஆனால் லினக்ஸ் இயக்கு தளத்தில் பிரச்சனை என்றால் நமக்கு உதவ நுற்றுக்கணக்கான லினக்ஸ் சமூகங்கள் மற்றும் சேவை குழுக்கள் கற்றுக்கொடுக்க உள்ளன. உங்களின் கேள்விக்கு உடனடிப் பதில்கள் கிடைக்கும்.


லினக்ஸ் இப்போது பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது , இதற்குக் காரணம் பயனர் நட்பு இயக்கத்தளங்களான பெடோர (FEDORA) , உபுண்டு (UBUNTU) போன்றவையேயாகும். இவை நிச்சயம் திறந்த மூல (Open Source) இலக்கியத்தில் தலைசிறந்த ஒன்று என்பதில் எந்த ஐயமும் இல்லை...!