Ta:NeMo-Boot2Gecko

From MozillaWiki
Jump to: navigation, search

நீமோ கட்டுரை தளம்
ஆன்ட்ரியாஸ் கேலன் (ஆராய்ச்சி இயக்குநர், மோசில்லா) உடனான Boot2Gecko பற்றிய நேர்காணல்
கட்டுரை தளம் செல்ல | முகப்பு
மொழிபெயர்ப்பாளர்
கௌதம்ராஜ் (Gauthamraj Elango)

நேர்காணல் :

  • B2G திட்டம் எதனை கொண்டு வர முயற்சிக்கிறது ? இத்திட்டம் மொபைல் சாதனங்களில் திறந்த வலை தரத்தை கொண்டு வரும் முயற்சி என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும் , நீங்கள் சிறிது விரிவுபடுத்த முடியுமா?

BOOT2GECKO என்பது ஒரு முழுமையான , தனியே இயங்கும் திறந்த வலைக்கான இயக்கு தளத்தை உருவாக்குவதும் மற்றும் இன்றைய நவீன மொபைல்களின் இயக்க முறைமைகளின் அணுகுமுறையான "வால் கார்டனை" கணக்கில் கொண்டு இதனை வடிவமைப்பதுமே ஆகும். வலை பயன்பாடுகளுக்கான அடுத்த எல்லைக்கோடாக முழு சாதன ஒருங்கிணைப்பு என்று மோசில்லா நம்புகிறது. அதனால் , இயக்கு தளம் சார்ந்த அடுக்குகள் உருவாக்குபவரின் அதே திறனை இணைய உருவாக்கிகளும் கொண்டு இருப்பர்...!

இத்திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட கட்டமைப்பு, வலை உருவாக்கிகளுக்கு HTML5-ஐ நேரடியாக இணையத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்குகிறது.அதனால் , மூடிய விற்பனையாளர்களின் தளங்களில் உருவாக்க இயலாத ஆச்சரியமான பயனர் அனுபவங்கள் மற்றும் பயன்பாடுகளை இணைய இயக்குனர்களால் உருவாக்க முடியும்.

  • GECKO தான் பையர்பாக்ஸ்-க்கு சக்தி கொடுக்கிறது . மொபைல் சாதனங்களிலும் இந்த GECKO-வை பயன்படுத்த இதில் என்ன சிறப்பம்சம் உள்ளது ?

GECKO மொசில்லா மற்றும் பையர்பாக்ஸ் உலவிக்கு இதயமாக அமைந்துள்ளது. சிறிய இலகுரக மற்றும் மூல திறந்த பண்புகளை கொண்டுள்ளதால் மொபைல் சாதனத்தில் திறந்த வலையை சக்தி ஊட்ட இயற்கையான தேர்வாகும்.

  • அண்ட்ராய்டு பலரால் திறந்த மூலமாக கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் அதற்க்கு பங்களிக்காமல் , எதற்காக புதிய திட்டம் தொடங்க வேண்டும் ? இதனை நீங்கள் மறுத்தால் அதற்க்கான காரணம் என்ன ?

சில அண்ட்ராய்டு மூல குறியீடுகள் மட்டுமே கிடைக்கிறது. அண்ட்ராய்டு கூகிலின் தனியுரிமை தொழில்நுட்பம் ஆகும். திட்டத்தின் அனைத்து முடிவுகளையும் கூகிள் மட்டுமே இரகசியமாக எடுக்கிறது. ஆனால் , BOOT2GECKO முழுமையாக திறந்த முறையிலேயே உருவாக்கப்படுகிறது . மேலும் , இதன் அனைத்து மூல குறியீடுகளும் ஆன்லைனில் மிக எளிதாக கிடைக்கும்.மொசில்லா மட்டுமே குறியீடுகளை உருவாக்குவதற்கு பதிலாக இயக்குபவர்கள் மற்றும் OEM கள் சுறுசுறுப்பாக மற்றும் வெளிப்படையாக குறியீடுகளுக்கு பங்களிக்க முடியும்.

  • B2G தொலைபேசியை முற்றிலும் வலை சார்ந்ததாக மாற்றி விடுமா ? அடிப்படை தொலைபேசி சார்புகளை எப்படி பெறுவது ?

BOOT2GECKO அடிப்படை தொலைபேசி செயல்பாடுகளை இணையத்தை பயன்படுத்தியே அமல்படுத்துகின்றது . நாம் வழக்கமான தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஆனால் , அதற்காக ஒரு HTML5 பயனர் முகப்பை (UI) பயன்படுத்த வேண்டும் .

  • எந்த மொபைல் தொழில்நுட்பங்களை தொலைபேசியில் உள்ளடக்க மொசில்லா திட்டமிட்டுள்ளது ? இந்த தொலைபேசி 3G/4G நெட்வொர்க்குகள் ஆதரவு அளிக்குமா ?

நாங்கள் ஒரு தொலைபேசி உருவாக்க OEM களுடன் இணைந்து பணிபுரிகிறோம். மேலும் , மற்றும் தொலைபேசியின் சரியான விவரக்குறிப்பு எங்கள் OEM பங்குதாரர்களே தீர்மானிப்பர்.

  • கைய (Gaia ) திட்டம் என்றால் என்ன ? அது எவ்வகையில் B2G திட்டத்தில் இருந்து மாறுபடுகிறது ?

கைய (Gaia) திட்டமானது B2G-ன் தோழமை திட்டமாகும். அதுவே , வலை சார்ந்த மொபைல் பயனர் அனுபவத்தை அமல்படுத்துவதாகும். கைய ஒரு வலை பயன்பாடுகளின் தொகுப்பாகும். இவையே , BOOT2GECKO திட்டதின் பயனர் இடைமுகத்தை உருவாக்குகின்றது. B2G இயங்குதளம் மற்றும் பின்தளங்களில் கவனம் செலுத்துகிறது.

  • ஒரு பெரும் கூட்டத்திற்கு திறந்த வலையை கொண்டு செல்ல வேண்டும் என்ற கோட்பாடு மதிக்கத்தக்கதாக உள்ளது. ஆனால் , மொசில்லவால் IOS மற்றும் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டை குறைக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

எங்களுடைய நோக்கம் மற்ற தளங்களின் பயன்பாட்டை குறைப்பதில்லை .மாறாக வடிவமைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்க்கு ஒரு மாற்று தளத்தை வழங்குவதேயாகும். B2G திட்டத்தை கொண்டு இணையத்தின் சக்தியை மொபைலில் வழங்குவதையே நாங்கள் செய்ய விரும்புவதாகும். பாரம்பரியமான தனியுரிம தளங்கள் பயனர்களை அவர்களின் சொந்த சூழலிலேயே எப்போதும் இருக்குமாறு மறைமுகமாக நிர்பந்திக்கிறது.அதாவது , ஒருமுறை தொலைபேசியோ அல்லது பயன்பாடுகளை வாங்கும்போது அதே தளத்தில் எப்போதும் இருக்க வேண்டியுள்ளது. இதன்காரணமாக , டெவலப்பர்களை பயன்பாடுகளை பல தளங்களுக்கு ஏற்றவாறு உருவாக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

BOOT2GECKO மூலமாக , டெவலப்பர்களுக்கு ஒரு ஒற்றை, எங்கும் இயங்கும் இயக்குதளம் கிடைப்பது மட்டுமின்றி முன்னர் இருந்த தன்னிச்சையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இனி இல்லை. பயனர்களின் பார்வையில் B2G , எந்தொரு சாதனமன்றலும் , அது எந்த இயக்கு தளத்தை பெற்று இருந்தாலும் அவற்றில் தங்கள் பயன்பாடுகளை எளிதாக பயன்படுத்த உதவிசெய்வதே B2G திட்டமாகும். B2G திட்டத்தின் தொழில்நுட்பம் அனைத்து மொபைல் உலவிகளில் பயன்படுத்தப்பட்டால் , மேம்படுத்தப்பட்ட இணைய பயன்பாடுகளை நம்மால் எந்த ஒரு சாதனத்திலும் பெற முடியும்.

  • B2G திட்டம் வெற்றி பெற்றால் , இத்திட்டம் B2G சார்ந்த புதிய தொலைபேசி இயக்க முறைமைகளின் பதிப்புகளுக்கு வழிவகுக்குமா ? நீங்கள் அதன் தாக்கங்கள் என்று எதனை நினைக்கின்றீர்கள் ?

BOOT 2 GECKO திட்டமானது இணையத்தின் வெற்றியை மேலும் மேம்படுத்த வடிவமைக்கப்பட்டதாகும் மற்றும் திட்ட ஆரம்ப நிலையை வைத்துப் பார்த்தால் , இது பயனர்களிடம் பல வடிவங்களிலும் சென்றடைய முடியும் என தோன்றுகிறது. எங்களது முதன்மை நோக்கம் பயனர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு தனியுரிம ஸ்டாக்குகளுக்கு மாற்றாக வெளிப்படையான ஒன்றை வழங்குவதேயாகும்.

  • ஏன் சாதனத்திற்கு குவால்கம்(Qualcomm) சார்ந்த வன்பொருளை தேர்வு செய்தீர்கள்? அதன் பண்புகள் சிறந்தவையா ?

மோசில்லா முதல் சாதனங்களை வழங்க குவால்கம் நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து உள்ளது மற்றும் திட்டம் வளர வளர நாங்கள் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குவால்கம் தற்போது பெரிய தொகுதி சிப்செட்களை ஆண்ட்ராய்டு-அடிப்படையிலான ஸ்மார்ட்போன்கள் வழங்குகிறது , அதுவே சாதனத்தின் DNA – வாக உள்ளது. OEM –க்கு குவல்கமுடன் ஒருங்கிணைவது ஒரு மிக எளிதான மற்றும் திறமையான அனுபவம் தான்.