Ta:NeMo-Mozilla

From MozillaWiki
Jump to: navigation, search

நீமோ கட்டுரை தளம்
மொசில்லா என்றால் என்ன?
கட்டுரை தளம் செல்ல | முகப்பு
ஆசிரியர்
துவாரக் (Dwarak)
மொழிபெயர்ப்பாளர்
கௌதம்ராஜ் (Gauthamraj Elango)


மொசில்லா என்றால் என்ன ?

எனக்கு தேதி சரியாக நியாபகம் இல்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் , அன்று சந்தோசத்தின் உச்சகட்டத்தில் இருந்தேன் , காரணம் “நான் மொசில்லா பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டுவிட்டேன் “ என்ற தலைப்புடன் மின்னஞ்சல் ஒன்றை எனது அறிவுரையாளர் விநீல் அனுப்பினார்.


மறுநாள் நான் கல்லூரிக்கு சென்று , என் நண்பர்களிடம் இதைப் பற்றிக் கூறினேன்.அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு சராசரி முயற்சி இல்லை. எனவே, அவர்கள் என்னை ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள். குறிப்பாக பெண்கள் “ என்னை அற்புடமானவன் “ என்று முணுமுணுத்தனர். இது , ஒரு சாதனை தான் அல்லவா ?


அன்றுதான் , நான் மக்கள் மொசில்லாவைப் பற்றி என்ன கருதுகின்றனர் என்பதை யூகித்துக்கொண்டேன். ஒருசிலர் என்னிடம் வந்து , மொசில்லா தி ஃபயர் ஃபாக்சு , நான் தினமும் பயன்படுத்துவேன் என்று கூறினார்கள். வேறு சிலர் , “ஆச்சிரியத்துடன்..! மொசில்லவா அற்புதம்” என்று கூறினார்கள். மேலும் , சிலர் தவறாக-வாழ்த்துக்கள் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டதற்கு , மொசில்லாவா இல்லை கோட்ஜில்லவா ? அப்படி என்றால் என்ன ? என்று வினவினார்கள்.


மொசில்லா ! ஆம் அதே தான் !

மூன்றாம் வகை நபர்களுக்கு நான் தந்த பதில் இதோ..! மொசில்லவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள் , இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள எண்ணினார்கள். மொசில்லா என்பது இலாப நோக்கற்ற அமைப்பு , அதனுடைய குறிக்கோள் இணையத்தில் வெளிப்படைத்தன்மை , புதுமை , வாய்ப்பு ஆகியவற்றை மொசில்லா விஞ்ஞாபனம் கொண்டு மேம்படுத்துவதேயாகும்.


சரி..! நாம் ஓபன் சோர்ஸ் மற்றும் ஓபன் வெப் பற்றி ஓரளவு முந்தைய வெளியிடுகளில் பார்த்து இருக்கிறோம். காலம் செல்லச்செல்ல , இணையத்தின் பயன்பாடும் அதிகரிக்க , மக்களுக்கு ஓபன் சோர்ஸ் மற்றும் ஓபன் வெப்பின் முக்கியத்துவம் புரிந்தது. ஆனால், இதற்கான பங்களிப்பாளர்கள் ஒருசிலரே இருந்தனர்.


ஆர்வமிக்கவர் பலர் இருந்தனர் , எப்படி பங்களிப்பது என்று எண்ணியவர்களுக்கு மொசில்லா கைகொடுத்தது. மொசில்லா என்பது நெட்ஸ்கேப் நேவிகேட்டரின் , உலவியின் குறியீடுப்பெயர் . அச்சமயத்தில் , இருந்த ஒரே உலவி மொசைக் (MOSAIC) இதன் அதிர்ஷ்டம் உண்டு பண்ணுவதாகக் கருதப்படும் நபரின் (MASCOT) பெயர் கோட்ஜில்லா (GODZILLA). எனவே , மொசில்லா என்பது “MOsaic Killer” + “GODZILLA”

மொசில்லாவின் ஒரு சிறிய முயற்சி , மனித இனத்துக்கு ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்!

1998 ஆம் ஆண்டு , நெட்ஸ்கேப் நிறுவனம் மொசில்லா பௌண்டேசனை நிறுவியது. இது தான் ஓபன் வெப் , ஓபன் சௌர்ஸ்க் – கான முதல் சமுக முயற்சியாகும் , இதன் குறிக்கோள் உலவி உருவாக்குவதேயாகும். இரண்டே வருடத்தில் , பல நிறுவனங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றியது. இவை , உலவியின் முன்னேற்றத்திற்கு பங்களித்தனர் . இவற்றின் ஒன்றுபட்ட குறிக்கோள் வலையின் திறந்ததன்மை மற்றும் மென்பொருள் உருவாக்குவதேயாகும்.


2001 ஆம் ஆண்டு , மொசில்லா 1.0 வெளிவந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் , உலவி திட்டதின் பெயர் பையர்பாக்ஸ்(firefox) என்று மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டு , பையர்பாக்ஸ் 1.0 வெளியானதும் லட்சகணக்கான பதிவிறக்கம் சில நேரத்தில் ஆனது. இதைத் தொடருந்து மற்ற மென்பொருள் சமுதாய திட்டங்களான தண்டேர்பிர்ட் , சீமொன்கி வெளிவந்தன.


மொசில்லாவின் நோக்கம் பையர்பாக்ஸ் உருவாக்குவது மட்டும் அல்ல. மக்களுக்கு ஓபன் வெப் மற்றும் ஓபன் தரத்தை இணையத்தில் தருவதேயாகும். இணையம் என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. இக்காலத்தில் , இணையம் பல புதிய அம்சங்களுடன் கொடி கட்டிப்பறக்கின்றன. ஆடியோ , வீடியோ எடிட்டிங் , ஆன்லைன் கோப்பு திருத்ததல் போன்ற அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை.


மொசில்லா இணையத்தின் இந்த திறனை அறிந்துகொண்டு , தொடர்ந்து இணையம் மக்களுக்காக பயன்பட போராடி வருகிறது. புதிய திட்டங்களும் மொசில்லாவால் தொடங்கப்பட்டன.கடந்த பத்து ஆண்டுகளாக , மொசில்லா தன்னை வடிவமைத்துக் கொண்டு ஓபன் சௌர்ஸ்சின் சக்தியை மற்றவர்களுக்கு சிறந்த பயனர் தயாரிப்புகள் முலமாக வெளிப்படுத்தியது.


மொசில்லா நமது பங்களிப்பை மதித்து , அனைவருக்கும் இணையத்தில் தங்களின் கனவை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பை அளித்துவருகிறது. மொசில்லா மக்களின் மிது நம்பிக்கை வைத்து , நம்முடன் சேர்ந்து ஓபன் வெப் மற்றும் ஓபன் ஸ்டான்டர்ட்ஸ்-க்காக போராடி வருகிறது.எனவே, இது ஒரு மொசில்லாவும் நாமும் சேர்ந்த நடக்கும் இயக்கம் அல்ல , ஒரு புரட்சியாகும்.