TA:NeMo

From MozillaWiki
Jump to: navigation, search

முகப்பு | திட்ட கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் | மக்கள் | கட்டுரைகள் | சந்திப்புகள்


Nemo900.jpg

ஆஹா! நீங்கள் தற்போது பார்த்துக்கொண்டு இருப்பது நீமோ திட்டத்தின் விக்கி பக்கமாகும் .
நீமோ (NeMo) என்பது நீ(Ne)யுஸ்(ws) மொ(Mo)சில்லா(zilla)-வின் குறுகிய வடிவமாகும். இந்த திட்டமானது மொசில்லா மற்றும் திறந்த மூல செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் அதிகரிப்பதனையே இலக்காக கொண்டது.கல்வி கட்டுரைகளுக்கான ஒரு தரவுத்தளத்தை உருவாக்கி அவற்றை உலகெங்கிலும் உள்ள உள்நாட்டு வெளியீடுகளுக்கு பங்களிப்பு ஆக்கங்களாக சமர்ப்பிப்பதன் மூலம் , நாங்கள் மோசில்லா, அதன் தயாரிப்புகள் மற்றும் திறந்த மூல மென்பொருள்களின் நன்மைகளை பயனர்களுக்கு பயிற்றுவிக்க முடியும் என நம்புகிறேம்..

IRC-ல் எங்களை தொடர்புகொள்ள: #nemo

எதற்காக இத்திட்டம் மற்றும் அதன் இலக்கு என்ன ?


இன்றும் ஒரு கணிசமான மக்கள்தொகை பொழுதுப்போக்கு மற்றும் தகவல்களுக்கு செய்தித்தாள் மற்றும் பிற அச்சிடப்பட்ட ஊடகங்களையே நம்பியுள்ளது.அவர்களை அடைவது நாம் பங்களிப்பு கட்டுரைகளை உருவாக்கும் வரை எளிதாக இருக்காது.

உலகின் பெரும்பாலான பகுதிகளில், தகவல்கள் ஆங்கில மொழியிலேயே வெளிவருகின்றன...! இதன் காரணமாக , தமது பூர்வீக / உள்ளூர் மொழியை சார்ந்து உள்ள ஒரு கணிசமான மக்கள் தொகைக்கு இத்தகவல்கள் சென்றடைவதில்லை .எனவே, நமது குறிக்கோள் இந்த மொழி தடைகளை உடைத்து இடம் மற்றும் மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கு மோசில்லா பற்றிய செய்தியை எடுத்து செல்வதேயாகும்.

எதிர்கால இணையத்தை பொது மக்களின் நன்மைக்கு ஏற்றவாறு வடிவமைப்பதை பற்றியதே மொசில்லா முறையான செய்தித்தாள் கட்டுரைகள் முலம் , மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு வந்து இணையத்தை ஒரு சிறந்த இடமாக்க முயற்சிக்கிறோம். நாம் அதனை புதிய வகையான மக்களை சென்றடைவதன் முலம் செய்கிறோம் -மாணவர்கள், கல்வியாளர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் அல்லது அது ஒரு சாதாரண இணைய பயனர் மற்றும் தங்களின் இணைய வாழ்க்கையை பற்றி அக்கறை கொண்ட எவராயினும் இருக்கலாம்.

எனவே, நம் திட்டம் என்னவென்றால் பல்வேறு தலைப்புகளில் எளிமையாக மொழியில் செய்திக்கட்டுரைகளை உருவாக்கி , மொழிமாற்றம் செய்து-உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் தொழில் நுட்ப வலைப்பதிவுகளில் அவற்றை வெளியீடு செய்ய முயற்சிப்பதேயாகும்

கட்டுரைகளின் இயல்பு


நாம் ஓர் எடுத்துக்காட்டாக நமது பையர்பாக்ஸ் உலாவியை கருத்தில் கொள்வோம்.

  • நாம் பையர்பாக்ஸ் எப்படி ஓபன் சோர்ஸ் தளத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ,அது எப்படி இணையத்தை "திறந்ததாக" உருவாக்க அக்கறை கொண்டுள்ளது மற்றும் அது எப்படி இணையத்தில் மக்கள் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டுள்ளது என்பதை அனைத்து வகையான மக்களுக்கும் புரியும் வகையில் இக்கட்டுரைகள் முலம் விளக்கலாம்.
அல்லது
  • பல தொழில்நுட்பங்கள் (HTML5, WebM, CSS SVG, GeoLocation, Websockets) பையர்பாக்சில் செயல்படுத்தப்படுகின்றன. ஏன் இந்த இணைய தரப்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதை கட்டுரைகளில் விளக்கலாம் . மேலும் , இந்த தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் , செயல்பாட்டுத் தன்மை , உருவானவிதம் மற்றும் அதன் வளர்ச்சி , தகவமை போன்றவற்றை விளக்கலாம்.

நாம் இணைந்து வேலை செய்து மேல்கண்ட இருவகையான கட்டுரை வளங்களை உருவாக்குவோம்.

நாம் வெளியிடுபவை வெளியீட்டாளர்கள் மற்றும் அவர்களது இலக்கு பார்வையாளர்களின் இயல்பு மற்றும் பின்னணியை சார்ந்தே இருக்க வேண்டும்.ஒவ்வொரு இடத்திலும் உள்ள ரெமோ , Comms SIG - களை முலோபாய படிவம் நிரப்ப வைப்பதன் முலம் நாம் இதனை அடையலாம்.

திட்டத்தின் நோக்கம்


நாட்கள் செல்ல செல்ல,மேலும் புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும் இதன் காரணமாக நமது இணையம் மேலும் பரிணானம் அடையும்.ஒரு மேம்பாடு நிகழும்பொழுது , அதன் தேவை மற்றும் இணையத்தை திறந்த தன்மையுடையதாக்க அதன் பங்களிப்பு போன்றவற்றை சிறுகட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் விளக்கி கட்டுரை களஞ்சியத்தில் புதுப்பிக்கலாம்.

தற்போது, நம்மிடம் அவ்வகையான கட்டுரைக் களஞ்சியங்கள் ஒன்றும் இல்லை.எனவே, திட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் சிறிது திவிரமாக பணியாற்றுவோம். பொருத்தமானது என தோன்றும் ,அனைத்து தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுத நாம் மூயற்சிப்போம்.இதனை செய்து விட்டால் , ஏதாவது புதியவை வந்தால் மட்டுமே நாம் கட்டுரை களஞ்சியத்தை மேம்படுத்த வேண்டி இருக்கும்.

கட்டுரைகள் எழுதுவதோடு மட்டும் நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ளப் போவதில்லை-நமது முதன்மை உட்கருத்து மொசில்லாவை பரப்புவதேயாகும் - அறியவகை மேம்பாடுகளான போட்காஸ்டுகள் (podcasts ) , வெபோமிக்ஸ் (webomics) மேலும் பல... போன்றவை காலப்போக்கில் நமக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.